காதலனுடன் சேர்ந்து தாயைக்கொன்ற மகள்!!

 


அநுராதபுரம் திருப்பனை பகுதியில் 65 வயது தாயை கொடூரமாக கொலை செய்ததாக அவரது 32 வயது இளைய மகளும், அவரது காதலன் என கூறப்படும் 25 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அனுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளில், உயிரிழந்த தாய் சுமார் 24 ஆண்டுகளாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்ததாகவும், சமீபத்தில் நாட்டுக்கு திரும்பியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், கொலைக்கு முன்னதாக தாயிடம் இருந்த சுமார் 10 லட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை திருடியுள்ளதாகவும், அந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்லும் திட்டத்துடன் இந்தக் கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.