இணையவழி மூலம் போதைப்பொருள் விற்பனை!!

 


யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் 1800 போதை மாத்திரைகளுடன் யாழ்.போதை ஒழிப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், யாழ். நகரப் பகுதியில் "ஒன்லைன் கொரியர் சேவையூடாக" போதை மருந்துகள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படுவதாக யாழ். பொலிஸ் நிலைய உதவிப் பதிசோதகர் கலம்சூரியவுக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதை அடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி செனவிரத்னவின் ஒருங்கமைப்பில் பொலிசார் மேற்கொண்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில் "கொரியர்" சேவையூடாக கொழும்பிலிருந்து பொதிசெய்யப்பட்டு யாழ்.குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையத்திற்கு வந்த பொதியை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழுப்பு பிரிவினர் கைபற்றி சோதனையிட்டனர்.

இதன்போதே குறித்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிசாரின் இந்த துரித நடவடிக்கையின் போது சுமார் 1800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.