சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!


 அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் நிர்வாகங்களும் உடனடியாக நித்தம்புவப் பொலிஸாரிடம் சமர்ப்பிக்குமாறு அனுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி எண்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான  சிறுமி பயன்படுத்திய தொலைபேசி எண்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை, எவ்விதத் தாமதமுமின்றிப் பொலிஸாரிடம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் பிரதம நீதவான் தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.