கணவர்களை மாற்றிய சகோதரிகள்!!

 


இந்தியா மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றக் கிளையில் விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

கணவர் ஒருவர்  தனது மனைவியைக் கடத்தியதாகக் தொடுத்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் விரும்பியே தனது தங்கையின் கணவருடன் சென்றதாகத் தெரிவித்தார்.

இதில் மேலும் ஒரு திருப்பமாக (Twist), குறித்த பெண்ணின் தங்கை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், "தனது கணவர் தனது அக்காவுடன் வாழ்வதில் எனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை" எனவும் . "நானும் அக்காவின் கணவருடன் தான் வாழப்போகிறேன்" எனவும்  கூறியதைக் கேட்டு நீதிமன்றமே அதிர்ச்சியடைந்தது.

இதனைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த நீதிபதி, "இது ஒரு தனிப்பட்ட குடும்ப விவகாரம்" என்று கூறி, கடத்தல் வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.