மண்சரிவு எச்சரிக்கை அபாயம்!!

 


தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.