ஜனாதிபதியின் முக்கிய உத்தரவு!!
மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க பொது மக்கள் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரசாங்க திணைக்களம், உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் இந்தச் சேவைகளுக்கு எவ்வித தடங்கல்களும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள 15 அத்தியாவசிய சேவைகளின் விபரங்கள் வருமாறு:
01. மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள்.
02.பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம்.
03.மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகள்
04.பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்திற்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகள்
05..வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா வசதிகளைப் பேணுதல்.

.jpeg
)





கருத்துகள் இல்லை