நனவாகும் தமிழக மக்களின் கனவு!!

 


தமிழ்நாட்டில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 2 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ப்பு தமிழ்நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை தெரிவித்துள்ளதாக  ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.     இதன்மூலம் 118 என்ற பெரும்பான்மை பலம் எட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் தனது ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கியுள்ள கடிதத்தில்,

“தமிழக மக்களுக்கு நிலையான, ஜனநாயக முறையிலான ஆட்சி கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விசிக தனது 2 எம்எல்ஏ.,க்களின் ஆதரவையும் தவெகவுக்கு எந்த நிபந்தனையும் இன்றி வழங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு கேரளம் புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்  தவெக தலைவர் விஜய்  ஆளுநரை  இன்னும் சற்று நேரத்தில் சந்திப்பார்  என  கூறப்படுகின்றது.

அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தவெக ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் இனிப்புகளை வழங்க்கி வருகின்றனர். இந்நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பார். இதன் ஊடாக தமிழக மக்களின் கனவு நனவாகவுள்ளது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.