அர்ச்சுனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை!!


 யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மருத்துவச் செலவுக்காகப் புலம்பெயர் தேசங்களிலிருந்து நிதி திரட்டப்படுவது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சாவகச்சேரி நகரசபையின் உப நகர பிதா ஞானப்பிரகாசம் கிஷோர்,

மக்களை ஏமாற்றிப் பாராளுமன்றம் சென்று, புலம்பெயர் மக்களிடம் கோடிக்கணக்கான நிதியைத் திரட்டி சொகுசு வாழ்க்கை வாழும் அர்ச்சுனா, தனக்கு வர வேண்டிய நிதி வராமல் போய்விடுமோ என்ற பொறாமையிலேயே இவ்வாறு கூச்சலிடுகிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற கல்விமான்கள் வாழ்ந்த நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா போன்றவர்கள் இருப்பது தமிழ் சமூகத்திற்கே வெட்கக்கேடானது என்றும் அவர் சாடியுள்ளார்.

அர்ச்சுனாவுக்கு முதுகெலும்பும் துணிவும் இருந்தால் யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும் அல்லது மீண்டும் ஒருமுறை தமிழக மண்ணில் கால் வைத்துக் காட்ட வேண்டும் என கிஷோர் இரட்டைச் சவால்களை விடுத்துள்ளார்.

தமிழ் தேசியப் போராட்ட காலத்திலும், இறுதி நேரத்தில் தேசியத் தலைவரின் தாயாரின் மருத்துவப் பராமரிப்பு மற்றும் இறுதிச்சடங்கு வரை அனைத்தையும் துணிச்சலுடன் முன்னின்று நடத்தியவர் சிவாஜிலிங்கம் எனச் சுட்டிக்காட்டிய கிஷோர், "வைத்தியர் என்ற பெயரில் இருக்கும் இந்த விஷக்கிருமி, இனிமேல் சிவாஜிலிங்கம் குறித்து ஏதாவது பேசினால் நடப்பதே வேறு என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.