பெண் என்றால்!!

 


ஒரு வீட்டில் 

மனைவி விடுமுறை மதிய உணவை செய்கிறார்

என்று வைத்துக் கொள்வோம். 


இரண்டு மணி நேரம் சமையல் செய்ய அவ்வளவு டயர்டாக இருக்கும். 


செய்து முடித்த பிறகு “ இதை எல்லாம் கொஞ்சம் சாப்பிட டைனிங் டேபிள்ல அல்லது ஹால் தரையில எடுத்து வையுங்க. நான் குளிச்சிட்டு வந்திர்றேன்” என்று மனைவி சொல்லிவிட்டு போகிறார்.


குளித்து விட்டு வந்தால். அது அது அப்படியே இருக்கிறது. கணவன் காலாட்டிக் கொண்டு மொபைலை பார்த்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் ஏதும் கண்டுகொள்ளவில்லை.


மனைவி வேகமாக உடைமாற்றி 


சாம்பாரையும் கிச்சனில் இருந்து ஹாலுக்கு எடுத்து வருகிறார். - 1 


அடுத்து பொரியலையும் கூட்டையும் ஒவ்வொரு கையில் தூக்கி வருகிறார். - 2 


ரசம் அடுத்து - 3


உப்பு தேவைப்பட்டால் போட உப்பு டப்பா - 4 


ஊறுகாய் டப்பா - தயிர் - 5 


அடுத்து தண்ணீர்... - 6 


சாப்பாடு போட தேவையான வீட்டினர் எண்ணிக்கை அளவிலான தட்டுகள். - 7 


அடுத்து பெரிய சோற்று பானை அல்லது சோற்று குக்கர் - 8 


கிச்சனுக்கும் ஹாலுக்கும் இடையே நான்கு மீட்டர்கள் தொலைவு என்று வைத்துக் கொள்வோம். 


ஒருமுறை போய்வர எட்டு மீட்டர்கள். அப்படியானால் எட்டுமுறை போய்வர 64 மீட்டர்கள். 


அந்த குடும்பத்தலைவி அங்கும் இங்கும் அலைந்து அனைத்தையும் ஹாலில் தூக்கி தனியாளாக வைக்கிறாள். 


அவர் எடுத்து வைத்ததும், அனைவரும் வக்கனையாக நன்றாக தின்னுகிறார்கள். 


சாப்பிட்டு முடித்த பிறகு கணவன் யப்பா யப்பா டயர்டா இருக்கு என்று கட்டிலில் போய் படுக்கிறான்.


மனைவி மறுபடி ஹாலில் எடுத்து வைத்து தின்ற உணவுகளை கிச்சனுக்கு எடுத்து போய் அவற்றை மூடி வைத்து விட்டு, பாத்திரம் கழுவ போட்டு விட்டு


கைகளை துடைத்தபடியே பெட்ரூமுக்குள் நுழைகிறாள். 


அப்போது கணவன் “ இந்த ப்ரிட்ஜ்ல ஒரு சாக்லேட் வைச்சிருக்கேன் பாரேன். எடுத்துட்டு வா.. சாப்பிடனும் போல இருக்கு” என்று சொல்கிறான். 


இப்போது மனைவி எல்லையில்லாத எரிச்சலில் “வேணுமின்னா போய் எடுத்துக்க போ... நான் என்ன மாடா மனுஷியா” என்று எரிந்து விழுகிறாள். 


கணவன் இதனால் மனமுடைந்து முகம் திருப்பி மொபைல் பார்த்துக் கொண்டிருக்கிறான். ரீல்ஸ் பார்க்கிறான். 


ரீல்ஸ் எங்கும் “பீரியட்ஸில் பெண் ஆவேசமாய் இருப்பாள். கோபப்படுவாள். கத்துவாள், திட்டுவாள். Pre Periods யில் அவளுக்கு மூட் ஸ்விங் அதிகம் இருக்கும். அழுவாள். எரிந்து விழுவாள்” என்றிருக்கிறது. 


இந்த கணவனும் “ ஓஹோ இவளுக்கு ப்ரீ பீரியட்ஸ் மூட் ஸ்விங்ஸ் போல. அதான் சின்னதா ஒரு சாக்லேட் எடுத்துகேட்டா கூட எரிஞ்சி விழுறா... பாவம். அவளோட உடல்நிலை அப்படி” என்று புரிந்து கொள்கிறான். 


பீரியட்ஸ் மூட் ஸ்விங், ப்ரீ பிரியட்ஸ் மூட் ஸ்விங் எல்லாம் ஆண்களால் இது போல தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. 


அதாவது சமையலறையில் மனைவிக்கு உதவவில்லை, சாப்பாடு எடுத்து வைக்க உதவவில்லை ஆனால் எல்லாம் முடித்து பெட்ரூமுக்கு வரும் மனைவிக்கு கணவன் இன்னொரு வேலை கொடுக்கிறான். 


மனைவி எரிச்சலுற்றது அந்த ஆணுடைய கொடுமை செயலுக்கு 


ஆனால் அந்த ஆணோ வசதியாக “ பாடம் இவளுக்கு பீரியட்ஸ் மூட் ஸ்விங்ஸ்” என்று புரிந்து கொண்டு “தான் எதுவும் செய்யவில்லை” என்கிற மனநிலைக்கு போய் நிம்மதியாக கடைசிவரை திருந்தாமலே இருக்கிறான். 


பெண்களை பொறுத்தவரை உங்கள் பீரியட்ஸ் மூட் ஸ்விங் என்று ஒன்று இருந்தால் ஒருவேளை உங்களுக்கு இருந்தால் அதை வீட்டில் ஜாலியாக, கிண்டலாக ஒரு பேசு பொருளாக, காமெடி கண்டெண்டாக பேசவே விடாதீர்கள். 


அப்படி நீங்கள் பேச விடும் போதுதான் அது பேசப்பட்டு பேசப்பட்டு காமெடியாக்கப்பட்டு, அதில் இருந்து இன்னும் இன்னும் காமெடிகள் உருவாக்கப்பட்டு நீங்கள் உண்மையான நியாயமான  விஷயத்துக்கு கோபப்பட்டாலும் கூட அதை உங்கள் குடும்பம் ஆராயாமல் 

“பாவம் இவளுக்கு மூட் ஸ்விங்ஸ்”

“பாவம் அம்மாவுக்கு பிரியட்ஸ் மூட் ஸ்விங்ஸ்” என்று 


மூட் ஸ்விங்ஸ் மேல் பழி போட்டு “நாங்கள் எதுவும் செய்யவில்லை” என்று குடும்பத்தினர் கம்பர்ட் ஸோன் சென்று மறுபடியும் அந்த பெண்ணை முடிந்த மட்டும் சுரண்டுகின்றனர். 


ஸோ பெண்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ள அதிகம் பேசப்பட வேண்டும் என்று நினைத்த மூட்ஸ்விங் டாப்பிக், இப்போது பெண்களின் வலிக்கு ஆணாகிய நான் காரணமில்லை என்ற நிம்மதியை ஆண் பெறுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது என்கிற விழிப்புணர்வு பெண்களுக்கு வேண்டும். 


உங்கள் மூட் ஸ்விங்கை பற்றி கிண்டலாக, சுயகிண்டலாக உங்கள் குடும்பத்தினரிடம் எதுவும் பேசாதீர்கள். 


அவர்களையும் இது பற்றி கிண்டல் செய்ய விடாதீர்கள். 


ஆண்கள் உங்களை இந்த விஷயத்தில் சுற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.


பெண்கள் அவர்கள் கம்பீரத்தை இதில் மெயிண்டயின் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.


ஆண்களை பொறுத்தவரை எளிமையான கேள்விகளை இப்படி கேளுங்கள். 


1. இந்த உணவு என் முன்னே இருக்கிறதே. இது எப்படி வந்தது. இந்த வீட்டில் யார் இதற்கு உழைத்தார்கள். 


2. இந்த தரை சுத்தமாக இருக்கிறதே. யார் இந்த வீட்டில் இதற்கு உழைத்தார்கள். 


3.இந்த துணி சுத்தமாக அலமாரியில் மடிக்கப்பட்டு இருக்கிறதே, யார் இந்த வீட்டில் இதற்கு காரணம். 


அதற்கு யார் காரணமோ அவர்கள் அந்த ரிசல்ட்டை கொண்டு வர எவ்வளவு வேலை செய்திருப்பார்கள் என்பதை படிப்படியாக கற்பனை செய்து பாருங்கள்.


அப்படி அவர்கள் செய்யும் போது நீங்கள் வேலை செய்யாமல் இருந்தால் எவ்வளவு சலிப்பாக இருக்கும். 


நீங்களும் உங்கள் நண்பரும் அறை எடுத்து தங்கி இருக்கிறீர்கள். 


நீங்கள் அறையை சுத்தப்படுத்துகிறீர்கள், 

சமைக்கிறீர்கள்

எல்லா வேலையும் செய்கிறீர்கள். 

உங்கள் நண்பர் அப்போதெல்லாம் மொபைல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். 

ஆனால் சாப்பிட மட்டும் முதல் ஆளாய் வந்து விடுகிறார். 


நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா... 

அதே போல்தான் உங்கள் வீட்டிலும். 


இதை புரிந்து கொள்ளாமல் “ பாவம் இவளுக்கு பிரிட்ஸ் மூட் ஸ்விங்ஸ். அதான் இப்படி போல” என்று எஸ்கேப் ஆவது மிகத்தவறான செயல். 


யங்ஸ்டர் நண்பர் ஒருவர்


“அண்ணா வீட்ல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பேசிக்கிறாங்க. 


நான் இப்ப வேணாம் எனக்கு இன்ன காரணம் இருக்கு வேணான்னு சொல்ல, அப்படி சொன்னா, 


அதை அப்பாவும் அம்மாவும் கண்டுகிறதில்ல. 


அதனால நான் இன்னும் கத்தி சத்தமா சொன்னாக்க. நான் டென்சன் ஆனாக்க 


என் அப்பா என் முகத்தையே கூர்மையா பாக்குறாரு. உத்து பாக்குறாரு. அப்புறம் அம்மாகிட்ட 


“பாவம் இவன் பசிலதான கத்திட்டு இருக்கான். நல்ல சாப்பாடு போடு... பசிதான் காரணம்... படபடன்னு பேசுறான் பாரு இவன்” 

அப்படி சொல்வாரு. அப்படி சொல்லும் போது ஆத்திரமா வரும்” என்பார்.


இதே போலதான் பெண்களின் உண்மையான உணர்வுகளை கண்டுகொள்ளாமல் 

“பாவம் இவளுக்கு மூட் ஸ்விங்ஸ் அதனாலத்தான் ஆத்திரப்படுறா” என்று ஏமாற்றும் தந்திரத்தை ஆண்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


ஆண்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.


பகிர்வு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.