Finland முழுவதும் போர்விமானங்கள் அதிகமாக பறப்பது குறித்து மக்கள் மத்தியில் கவலையும், பதட்டமும் !
இன்று Finland முழுவதும் போர்விமானங்கள் அதிகமாக பறப்பது குறித்து மக்கள் மத்தியில் கவலையும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹெல்சிங்கி மற்றும் தென் பின்லாந்து பகுதிகளில் விமானச் சத்தம் அதிகமாகக் கேட்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக, பின்லாந்துப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பின்லாந்து பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், நாட்டின் பாதுகாப்பு தயார்நிலை உயர்த்தப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் “பின்லாந்துக்கு உடனடி ராணுவ அச்சுறுத்தல் இல்லை” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்லாந்து பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில்:
வான்வழிக் கண்காணிப்பு (Air Surveillance) அதிகரிக்கப்பட்டுள்ளது
விரைவு பதில் விமானங்கள் (Quick Reaction Alert Jets) தயார் நிலையில் உள்ளன
இராணுவக் ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படைக் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது
ட்ரோன் (Drone/UAV) அச்சுறுத்தல்களுக்கு எதிராக எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்பாதுகாப்பு பிரிவுகள் இணைந்து செயல்படுகின்றன
எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், ரஷ்ய எல்லைப் பகுதி மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் பக்கமாக நடைபெறும், இவையாவும், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு பதற்றங்களுக்குப் பிறகு தீவிரப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே13, 2026 அன்று பின்லாந்து அரசு புதிய “National Security Concept 2035” என்ற தேசிய பாதுகாப்பு கொள்கையை அறிவித்துள்ளது. அதில்:
ரஷ்யாவிலிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
சைபர் தாக்குதல்கள்
ட்ரோன் மற்றும் எல்லை பாதுகாப்பு,
NATO ஒத்துழைப்பு,
ஆகியவை முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதமர் Petteri Orpo, “மாறிவரும் உலக பாதுகாப்பு சூழலில் பின்லாந்து முழுமையான தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
NATO உறுப்பு நாடாக இணைந்த பின்னர், பின்லாந்து தனது இராணுவ ஒருங்கிணைப்பை வேகமாக அதிகரித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக:
வட பின்லாந்தில் NATO கட்டளை மையங்கள்
புதிய F-35 போர் விமானங்கள்,
ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள்
எல்லைப் பாதுகாப்பு விரிவாக்கம்
போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பின்லாந்து இராணுவப் புலனாய்வு தகவல் மதிப்பீட்டின்படி, " *“2026 ஆம் ஆண்டில் பின்லாந்துக்கு நேரடி ராணுவத் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு குறைவு”* என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு தயார்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
அதனால், தற்போது வானில் காணப்படும் போர்விமானங்கள் பெரும்பாலும்:
கண்காணிப்பு நடவடிக்கைகள்
தயார் நிலைப் பயிற்சிகள்
NATO ஒத்துழைப்பு நடவடிக்கைகள்
ட்ரோன் கண்காணிப்பு விடயங்களை ஒருங்கிணைந்து நடாத்தப்படும் பயிற்சி நடவடிக்கைகள் மட்டும்தான்
என அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மக்கள் அச்சப்படவோ பதட்டப்படவோ தேவையில்லை.



.jpeg
)





கருத்துகள் இல்லை