மின்னல் தாக்கியதால் திரும்பிய ஸ்ரீலங்கன் விமானம்: பயணிகள் பாதுகாப்பாக சிட்னி பயணம்!
கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி 207 பயணிகள் மற்றும் 16 விமானப் பணியாளர்களுடன் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக மின்னல் தாக்குதலுக்குள்ளானதை அடுத்து, இன்று (12) அதிகாலை மீண்டும் கட்நாயக்க விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பியனுப்பப்பட்டது.
மின்னல் தாக்கியதில் ஏர்பஸ் ஏ330 (Airbus A330) ரக விமானத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அது பாதுகாப்பாகக் கட்நாயக்கவில் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, மாற்று விமானம் ஒன்று உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று அதிகாலை 5:51 மணியளவில் பயணிகள் அனைவரும் சிட்னி நோக்கிப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை