திருநெல்வேலிச் சந்தி – ஆடியபாதம் வீதி பொதுமக்களின் கவனத்திற்கு!
திருநெல்வேலிச் சந்தி – ஆடியபாதம் வீதி தார்படுக்கை பணிகள் காரணமாக போக்குவரத்து தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
நாளை வியாழக்கிழமை (18.06.2026) மற்றும் வெள்ளிக்கிழமை (19.06.2026) ஆகிய இரு தினங்களிலும், திருநெல்வேலிச் சந்தி – ஆடியபாதம் வீதி பகுதியில் தார்படுக்கை (Carpet) இடும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் காரணமாக, இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டுள்ள குறித்த வீதிப் பகுதி, மேற்குறிப்பிட்ட இரு தினங்களிலும் முழுமையாக போக்குவரத்திற்காக மூடப்படும்.
எனவே, பொதுமக்களும் வாகனச் சாரதிகளும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், அபிவிருத்திப் பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெற பொதுமக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. ப. மயூரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.




.jpeg
)





கருத்துகள் இல்லை