உடப்பு ஶ்ரீ கந்தசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்!📸
புத்தளம் உடப்பு கடற்கரை அருகில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று (29) காலை 10.50 - 11.56 வரையுள்ள சுப நேரத்தில் நடைபெற்றது.
உடப்பு ஶ்ரீ பார்த்தசாரதி திரௌபதியம்மன் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ குமார பஞ்சாட்சரக்குருக்கள் தலைமையில் இந்த மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்ற பின்னர் பிரதான கும்பம் சுமக்கப்பட்டு ஆலயத்தை வலம் வந்து பின்னர் தூபிக்கு அபிஷேகம் இடம்பெற்றது.
பக்தர்கள் பலர் கலந்து முருகனின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.
#Whatsapp #TamilNews #tamilshorts #Tamilarul.Net #Tamilarul ##tamil #www #new #TamilNews #UdappuKanthaswamy #MahaKumbhabhishekam #Puttalam #SriLanka #LKA #SL














.jpeg
)





கருத்துகள் இல்லை