அர்ச்சுனா இராமநாதன் குறித்து இளங்குமரன் எம்.பி தெரிவித்த கருத்து!!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் கருத்து வெளியிட விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, களுத்துறையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாராட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கலந்து கொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்
இதன்போது கருத்து தெரிவித்த இளங்குமரன், “நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மஹிந்த ராஜபக்ச தரப்பைச் சேர்ந்தவர் என்பதனை நாம் முன்னரே கூறியிருந்தோம்.
தற்போது அவர் வெளிப்படையாகவே அந்தத் தரப்பின் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்” என்றார். மேலும், அருச்சுனா தொடர்பில் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அவர், அவரைப் பற்றிக் கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்தார்.
இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அருச்சுனா இராமநாதனின் அண்மைய அரசியல் நடவடிக்கைகள் குறித்த விவாதங்களும் தொடர்ந்துவருகின்றன.

.jpeg
)





கருத்துகள் இல்லை