சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்!!

 


பதின்ம வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாய் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பகுதியில் கடந்த 2026.03.24 அன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னர் சுமார் 3 மாத காலமாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான கள்ளக்காதலன் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

50 வயதுடைய சந்தேக நபர், சமூக வலைத்தளங்கள் ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்

தம்புள்ளை - கலேவலைப் பகுதியைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு 18 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளநிலையிலேயே, அப்பெண் , தனது 14 வயது மகளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு கல்முனை - நற்பிட்டிமுனைப் பகுதிக்கு வந்து கள்ளக்காதலனை சந்தித்துள்ளார்.

இந் நிலையில் தாயும் மகளும் தங்குவதற்காக கிராம உத்தியோகத்தரின் உதவி ஊடாக வாடகைக்கு வீடு பெறப்பட்டு, அ அங்கு தங்கியிருந்துள்ளனர். இதன்போது தாயுடன் தங்கியிருந்த சிறுமியை, குறித்த நபர் , துஸ்பிரயோகம் செய்ததாகவும் அதற்கு தாய் உடந்தையாக இருந்ததாகவும், கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.