சிக்கலில் ஜனநாயகன்!!

 


நடிகரும், தமிழக அரசியல் தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அதன் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படாத சூழல் காணப்படுகிறது.

படத்தின் வெளியீடு பல மாதங்களாக தாமதமாகி வரும் நிலையில், விநியோகஸ்தர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த தொகை மீள வழங்கப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியீட்டு திகதி தொடர்பில் தெளிவின்மை நிலவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கர்நாடகாவில் இருந்து புதிய எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து, சில கன்னட அமைப்புகள் 'ஜனநாயகன்' திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிடவில்லை.

சினிமா, அரசியல் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ள நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொடர்ந்தும் நிலவி வருகிறது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.