மீகொட சம்பவம் - சாரதிக்கு பயணத்தடை!!

 


மீகொட பகுதியில் இடம்பெற்ற ரொட்டித் தான்சலில் (அன்னதானம்) வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனமொன்று மோதியதில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், வாகன உரிமையாளருக்கு பயணத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, விபத்துக்குள்ளான கெப் ரக வாகனத்தின் உரிமையாளரைக் கண்டுபிடிப்பதற்காக மூன்று காவல்துறை குழுக்கள் இரவும் பகலும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபர் அப்பகுதியை விட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார் என்றும் மீகொட காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்விபத்தில் காயமடைந்து ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் ஒருவன் உள்ளிட்ட ஏழு நோயாளர்களும், தற்போதைய நிலையில் முழுமையாகச் சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று ஹோமாகம ஆதார மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் பிரியாஷா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.    

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.