சிறையில் உயிரிழந்த குடும்பஸ்தர்!!
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை - காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய சிறைக்கூடத்தில் கடந்த 7ம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்ற வேளை கடமையில் இருந்த இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ணவிற்கும் உள்ளக விசாரணை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை