தமிழ்நாட்டில் சிங்கப்பெண்கள் படை!!


 தமிழ் நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த "சிங்கப்பெண் அதிரடிப்படை"  திட்டம் இன்று  முதலமைச்சர் விஜய் துவக்கிவைக்க உள்ளார். தமிழ் நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததுமே மூன்று முக்கிய அறிவிப்பை தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

அதில் ஒன்றுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சிங்கப்பெண் அதிரடி படை  திட்டம் . முதல்வர்  சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் இன்று துவங்கப்படவிருக்கிறது.

இன்று மாலை 5 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜா ரத்தினம் திடலில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு இந்த திட்டத்தை துவங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதலும் கவனம் செலுத்த சிங்கப்பெண் அதிபடை உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை தடுக்க தமிழ்நாடு அரசால் பிரத்யோக காவல் படையாக இந்த சிங்கப்பபடை செயல்படவிருக்கிறது.

சிங்கப்பெண் அதிரடி செயல்படுத்துவதற்காக ஐஜி பவானீஸ்வரி ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த சிங்கப் பெண் படை பாதுகாப்பு கொடுப்பார்கள்.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடங்களை கண்டறிந்தும், ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அங்கு சிங்கப் பெண் அதிரடி செயல்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.