காதலனைக் கொன்ற காதலி தொடர்பான பெற்றோர் தெரிவித்த கருத்து!!
இந்தியா - புனேவில் உள்ள தொழிலதிபர் கேதன் அகர்வாலின் மர்ம மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது காதலி ஜியா கோயல் தொடர்பில் பெண்ணின் பெற்றோர் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கேதன் அகர்வால் என்ற செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர், 20 வயதுடைய ஜியா கோயலை இன்னும் சில மாதங்களில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், 400 அடி பள்ளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரின் இந்த மர்மமான மரணத்திற்கு அவருடைய காதலியான ஜியா கோயல் தான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜியா கோயலின் பெற்றோர்கள்,
“இந்தக் கொடூரமான குற்றத்தில் தங்கள் மகள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். என் மகள் இப்படி ஒரு குற்றத்தைச் செய்தாள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.
இந்நிலையில், சட்டத்தை மதிக்கும் மற்றும் படித்த இளைஞரான கேதனின் இந்த நிலைக்கு, ஒரு நியாயமான விசாரணையின் மூலம் நீதி வழங்கப்படும் என கேதனின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விசாரணையின் பின்னர், பொலிஸாரின் தடுப்புக்காவலில் உள்ள ஜியா கோயல் மற்றும் அவரது நண்பர் சேதன் சௌத்ரி ஆகியோரை ஜூன் 29 வரை மேலும் காவலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் புனே ஊரக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை