உயர் விருது பெற்ற யாழ். பேராசிரியர்!!
அவுஸ்திரேலியாவின் உயர்விருதான “Member of the Order of Australia (AM)” விருதை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம், பெற்றுள்ளார்.
உயர்ந்த சாதனைகளைப் பெற்ற பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்தை பாராட்டி, 2026ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி மன்னர் சார்ல்ஸின் பிறந்தநாள் கௌரவ விருதுகளின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான “Member of the Order of Australia (AM)” விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது
.இந்த கௌரவம் சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம், தற்போது சர்வதேச மன்னிப்புச் சபையின் அவுஸ்திரேலிய பிரிவின் தலைவராகவும், பல்வேறு முக்கிய அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளிலும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை