யோஷித தொடர்பான முக்கிய தகவல் வெளியானது!!

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவை செவ்வாய்க்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் நாளை முழுமையான விசாரணையொன்றை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.