செம்மணியில் இரண்டு குழ்ந்தை எலும்புக்கூடுகள்!!
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மேலும் 2 சிறுவர்களின் என்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள், 14ஆவது நாளாக இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய நாள் வரையில் 270 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதிகளில் 266 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவற்றுள் 257 மற்றும் 258ஆம் எண்களாக அடையாளப்படுத்தப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதிகள் சிறுவர்களுடையவை என இனம் காணப்பட்டுள்ளன.
கழுத்தில் கட்டப்படும் தாயத்து போன்ற தகடு ஒன்றும் சான்றுப் பொருளாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வுப் பணியின் போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை