எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய முடிவு!!

 


எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் கியூ.ஆர் குறியீட்டு முறைமை நீக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருண அறிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

எரிபொருள் நுகர்வைத் தொடர்ந்து திறம்பட நிர்வகிக்கும் நோக்குடனேயே, எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் கியூ.ஆர் குறியீட்டு முறைமையை நீக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.