பிரித்தானியாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு உற்சாக வரவேற்பு..!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளை (UOJ AA–UK), நேற்று பிரித்தானியாவை வந்தடைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்களை விமான நிலையத்தில் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றது.


இந்த வரவேற்பு நிகழ்வில் UOJ AA–UK நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு, சங்கத்தின் சார்பில் துணைவேந்தர் அவர்களுக்கு தமது இதயம் கனிந்த வரவேற்பையும் இனிய நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.


துணைவேந்தர் அவர்களின் இப்பிரித்தானியப் பயணம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் உலகெங்கிலும் வாழும் அதன் பழைய மாணவர் சமூகத்திற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அரிய வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.


ஒன்றுபட்ட பழைய மாணவர்கள்!

உயர்வடையும் தாய்ப் பல்கலைக்கழகம்! 








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.