இரத்மலானையில் விமானம் ஆபத்திலிருந்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.! 📸

 இரத்மலானை விமானப்படை தளத்தில் இன்று (15) பயிற்சியில் ஈடுபட்டிருந்த Y-12 வகை விமானத்தில், பட்டத்தின் நூல் சிக்கியதால், அந்த விமானம் மீண்டும் இரத்மலானை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. 



இந்தச் சம்பவத்தால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் ஆபத்திலிருந்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் இடது பக்க சில்லு, இடது இயந்திரப் பகுதி மற்றும் மேலும் சில பகுதிகளில் பட்டத்தின் நூல்கள் அதிகளவில் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.


இதேவேளை விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு முன்னரும் பல தடவைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. 


இவ்வாறான பட்டம் ஏற்றுவதால் விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது உலகளவில் விமான விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது விமான செயல்பாடுகளை நேரடி தடையாக அமைகிறது . 


 கட்டுநாயக்க, இரத்மலான, ஹிங்குரகொட, சீனக்குடா , அனுராதபுரம், யாழ்ப்பாணம் - பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில, மட்டக்களப்பு மற்றும் மத்தள ஆகிய இடங்களில் உள்ள ஓடுபாதைகளைச் சுற்றி இத்தகைய பரவலான பட்டம் விடுதல் தற்போது அதிக அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


எனவே பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், அத்தகைய பகுதிகளில் பட்டம் விடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு விமான படை கோரியுள்ளது.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.