ஜெர்மன் நாட்டில் படிக்க சென்ற குமரி இன்ஜினீயர் மாணவர் ஏரியில் மூழ்கி பலி
குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த முளவிளை வெட்டுக்குழியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர். இவரது மனைவி பிளாரன்ஸ் இன்பம். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு ஜெப்ரின் (வயது 29) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசிக்கிறார்.
♦️மகன் ஜெப்ரின் தோவாளையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தார். பின்னர் ஜெர்மன் நாட்டில் இங்கொல்ஸ்டாட் என்ற நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்க சென்றார். இவரது படிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு திரும்பி வர இருந்தார்.
ஏரியில் மூழ்கி பலி
♦️இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி கிறிஸ்துராஜிக்கு ஜெர்மனியில் இருந்து ஒரு போன் வந்தது. அதில் ஜெப்ரினுடன் படிக்கும் மாணவர் ஒருவர் பேசினார். அந்த மாணவர், ஜெப்ரின் நண்பர்கள் சேர்ந்து ஏரியில் குளிக்கச்சென்றதாகவும், இதில் ஏரியில் மூழ்கி ஜெப்ரின் இறந்து விட்டதாகவும், உடல் ஆஸ்பத்திரி அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதைக்கேட்டு கிறிஸ்துராஜும் அவரது குடும்பத்தினரும் நிலை குலைந்து போயினர்.
♦️இதுகுறிது பாராளுமன்ற உளுப்பினருக்கு கிறிஸ்துராஜ் தகவல் தெரிவித்தார். ஜெப்ரினின் உடலை தாயகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகத்தையும் அணுகியுள்ளார். மேற்படிப்பு படிக்க ஜெர்மனி சென்ற மாணவர் விரைவில் படிப்பு முடிந்து திரும்பி வர இருந்த நிலையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை