யாழில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட பேருந்து சாரதி.!
யாழில் பயணிகள் #உயிர்களை காப்பாற்றி தனியார் பேருந்தின் சாரதி திடீர் என ம*ர*ணம் அடைந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்...
இன்று (22/07) காலை நயினாதீவு - குறிகாட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் #தனியார் பேருந்தை செலுத்திச் சென்றுகொண்டிருந்தது.
இதன்போது, மண்கும்பான் சந்திக்கு அருகில்சாரதிக்கு திடீரென #நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து, பதறாமல் சாதுரியமாக செயற்பட்ட #சாரதி பேரூந்தினை அந்த #உயிர்ப் போராட்டத்தின் இறுதி நொடிகளிலும், தனது #பொறுப்பை மறக்காமல், பயணிகள் எவருக்கும் எந்தவிதமான #ஆபத்தும் ஏற்படாதவாறு பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து நடத்துனரின் உதவியுடன் #யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் #உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் 776 தனியார் பேருந்தின் சாரதி ரமேஷ் ஆவார்.
தனது கடமையை இறுதி மூச்சுவரை கைவிடாத ஒரு பொறுப்பான சாரதியின் திடீர் #மரணம் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#BreakingNews #SriLanka #LKA #Trending #Viral #Update #PublicNews #SriLankaNews #Colombo #LocalNews #LiveUpdates #Politics #செய்திகள் #SriLankaTamilNews #JaffnaNews

.jpeg
)





கருத்துகள் இல்லை