புளியங்குளத்தில் விபத்து - இளைஞன் பலி!!
![]() |
வவுனியா - புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் சந்தி பகுதியில் இன்று (25) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் #உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
யாழில் இருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் A9 வீதி புளியங்குளம், #புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்தில் #உயிரிழந்தார்.
அவரது சகோதரி #காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வவுனியா - புதுக்குளம் பகுதியை சேர்ந்த சத்தியநாதன் சஞ்சீவன் (வயது- 23) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
விபத்து குறித்து #புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சாரதிகளே.....!!
குடும்ப உறுப்பினர்களையோ அல்லது மற்றவர்களையோ பின்னால் ஏற்றிச் செல்லும்போது சாரதிகள் இரட்டிப்புப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
வேகக் கட்டுப்பாட்டைப் பேணுவதுடன், இருவருமே தரமான தலைக்கவசங்களை (Standard Helmets) அணிவது விபத்தின் போது ஏற்படும் ஆபத்தான தலைக்காயங்களில் இருந்து தப்பிக்க உதவும்.
நெடுஞ்சாலைகளில் "முந்திச் செல்வது" ஒரு சாகசம் அல்ல.. சில நொடிகள் தாமதித்து, பாதை தெளிவாக இருக்கும் போது முந்திச் செல்வதே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை