திருநங்கைகள் தொடர்பில் அமெரிக்கா நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!
அமெரிக்காவில் திருநங்கை விளையாட்டு வீரர்கள், பெண்களுக்கான விளையாட்டு அணிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கும் மாநிலச் சட்டங்களை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் வெஸ்ட் வெர்ஜீனியா மற்றும் இடாஹோ ஆகிய மாநிலங்கள் விதித்திருந்த தடைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து, இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விவகாரம் அமெரிக்காவில் தற்போதைய கலாச்சார மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுப் பாடசாலைகளில் உள்ள விளையாட்டு அணிகளை "உயிரியல் பாலினத்தின்" (Biological sex) அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்றும், பெண்களுக்கான அணிகளில் மாற்றுப் பாலினத்தவர் பங்கேற்கத் தடை விதிக்கலாம் என்றும் இந்த மாநிலச் சட்டங்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் மேலும் 25 மாநிலங்களில் இதேபோன்ற சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. கல்வி நிறுவனங்களில் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் 'டைட்டில் IX' (Title IX) என்ற கூட்டாட்சிச் சட்டத்தை இந்த மாநிலத் தடைகள் மீறவில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளும் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை