சட்டவிரோத சுருக்குவலையுடன் ஒருவர் கைது!!

 



யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில்  உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோத சுருக்குவலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் அதிகரித்துள்ளதால் அதனை தடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று (12) இரவு கட்டைக்காட்டில் தொடர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது உழவு இயந்திரத்தில் கடற்கரை பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட சுருக்குவலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.