தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!
![]() |
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஜே. நௌபர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜனைடீன் கலந்துகொண்டதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் மத்திய மாகாண ஆளுநருமான பேராசிரியர் சரத் அபயகோன் தொடக்க உரையாற்றினார்.
திங்கட்கிழமை (27) இறுதி நாளில் 07, 08 மற்றும் 09 ஆகிய அமர்வுகளில் மொத்தம் 1,010 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் 07 ஆவது அமர்வில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 272 பட்டதாரிகளும், 08 ஆவது அமர்வில் அதே பீடத்தைச் சேர்ந்த 474 பட்டதாரிகளும், 09 ஆவது அமர்வில் 264 வெளிவாரிப் பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இதற்கு முன்னர் கடந்த இரு நாட்களில் நடைபெற்ற 01 முதல் 06 வரையிலான அமர்வுகளில் மொத்தம் 2,388 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றிருந்தனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை