கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவு!!
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தப்பிச் செல்வதற்குச் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இந்த சந்தேகநபர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முடியாது என்றபோதிலும், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்திற் கொண்டு, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித சட்டத் தடையும் இல்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை