சுடரொளி விளையாட்டு கழகத்தின் துடுப்பாட்ட சுற்று போட்டி!!

 

 



சுடரொளி  விளையாட்டு கழகம் நாடாத்திய 4 வது பருவகால மென்பந்து துட்டுப்பாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள்  கரவெட்டி பிரதேச வைத்தியசாலை  பொறுப்பு வைத்திய அதிகாரியும், பிரதேச வாசியுமான மருத்துவ கலாநிதி வே. கமலநாதன் தலைமையில் நேற்று  பிற்பகல் 3:00 மணியளவில் புதுத்தோட்டம் சடரொளி விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. 



இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு  விளையாட்டு சீருடைகள் அறிமுகத்துடன் வீரர்கள் அறிமுகமும் இடம்பெற்றதனை தொடர்ந்து  விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

சுடரொளி விளையாட்டுக்  கழகத்தின்  நான்கு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிகழ்வில் 

சுடரோளி ஸ்டார்  கிங் 3 ம் இடத்தினையும், 

சடரொளி  fire  ஹிட்டர்ஸ் அணி 2 இடத்தினையும், 

சுடரோளி  சூப்பர்  ஸ்டார்  கிட்டர்ஸ் முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.


இதில் பிரதம  விருந்தினராக முல்லைத்தீத்தீவு வலய கல்விப்  பணிப்பாளர் இ.தமிழ்மாறன், சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி  தெற்கு மேற்கு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் க. அகல்யா, கிராம சேவையாளர் திருமதி ல.தனுஜா, நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் டி எல்லாவெல, பிம்மல் பிளாண்டேஷன் பொது முகமையாளர் N.புஷ்பவசந்தன், நெல்லியடி சிங்கர் முகமையாளர் க.துசியந்தன், ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர் இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசீல்கள், பதக்கம், கேடயம் என்பவற்றை பிரதம விருந்தினர்  முல்லைத்தீவு வலையக் கல்வி பணிப்பாளர் இ.தமிழ்மாறன், விளையாட்டு குழு தலைவர் வைத்திய கலாநிதி வே. கமலநாதன், உட்பட பலரும் வழங்கி கௌரவித்தனர்.


இதில் புதுத்தோட்டம் கிராம,  மக்கள்,  விளையாட்டு வீரர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதேவேளை வடக்கு மாகாண மாகாண மட்டத்தில் ஈட்டி எறுதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற 

பிரதாபன்  பிரவீன் அவர்களுக்கான விசேட கௌரவிப்பும் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.