எல்நினோ தாக்கம் தொடர்பில் வெளியான தகவல்!!

 


மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ தாக்கம் இம்மாதம் ஜூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ். கலட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில் சார்ந்தவர்களுக்கான செயலமர்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.

நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடற்பரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.

ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ அக்டோபர், நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்சியையும் ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.