சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!!

 



2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் பரிசீலனை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன் (8.7.2026) நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் என இரு தரப்பினரும் தமக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

விண்ணப்பிக்க விரும்பும் பரீட்சார்த்திகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.