மனைவி மகளைக்கொன்று கணவனும் தற்கொலை!!

 



தமிழ்நாடு தர்மபுரியில் கடன் தொல்லையால் மனைவி, மகளை கொலை செய்து விட்டு ஓடும் லாரியில் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது,

தர்மபுரி கோட்டை கோயில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்தோஷ் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா (35).   மகள் சாத்விகா (14),

நேற்று காலை சரண்யாவிற்கு, அவரது பெற்றோர் போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, நேரில் வந்து பார்த்தபோது, சரண்யா மற்றும் சாத்விகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். அதிர்ச்சிக்குள்ளான அவர்கள், சந்தோஷை தேடினர். அவருக்கு போன் போட்டும் எடுக்கவில்லை.

தகவலறிந்து வந்த தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் தர்மபுரி அருகே புறவடை பகுதியில் லாரி முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அது சந்தோஷ் என்பது தெரியவந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.