இந்தியாவின் மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகல்!!
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள சமயத்தில் இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று(25.07.2026) முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.
இன்றைய தினம் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும் இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை