"We Will Kill Trump" -
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, "We Will Kill Trump" (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த விளம்பர பலகை தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பர பலகையில், கருப்பு நிற சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் படுத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
அவரது தலைமுடி சீர்குலைந்த நிலையிலும், கண்களும் வாயும் மூடிய நிலையிலும், சிவப்பு நிற டையின் மீது கைகளை வைத்தபடி சித்தரிக்கப்பட்டுள்ளார். சவப்பெட்டியின் மீது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் "We Will Kill Trump" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இந்த விளம்பர பலகை, அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னணியில் துக்கச் சுவர் போன்ற வடிவமைப்பும், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை