அமரர் தேவி சோதி அவர்களின் நினைவு நாளில் சத்துணவு திட்டம்!!
அமரர்.தேவி சோதி அவர்களின் இறந்த தினமாகிய இன்றைய நாளில் (12.07.2026 ) மாதாந்த சத்துணவு வழங்கும் திட்டம் நொச்சிக்குளம் - தடயம் அறிவுச்சோலையில் இடம்பெற்றது.
அமரர் தேவி சோதி அவர்களின் நண்பர்களான "Happer Collins group" உறவுகள் இணைந்து இந்த சத்துணவு வழங்கலை மாதாந்தம் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த நாளில் அமரர் தேவி சோதி அவர்களின் ஆத்மா சாந்தியடைய மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
தமது நண்பியின் இறந்த தினத்தை இவ்வாறு மறவாத மனதுடன் நினைவு கூர்ந்துள்ள நண்பர்களுக்கு பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.




.jpeg
)





கருத்துகள் இல்லை