சிறைசாசாலைக்குச்சென்ற உலங்கு வானூர்தி!!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவி வரும் பதற்ற நிலை காரணமாக, சிறைக் கைதிகளின் உறவினர்கள் பெருமளவிலானோர் சிறைச்சாலை வளாகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, சம்பவ இடத்தில் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இந்தநிலையில், இலங்கை விமானப் படையின் பெல் 412 என்ற உலங்கு வானூர்தி நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கள நிலவரங்களை ஆராய்ந்து தகவல்களை வழங்கும் பொருட்டு குறித்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ட்ரோன்களும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலவரத்தில் சிறை அதிகாரிகள் உள்ளடங்களாக 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 பேர் வரையானோர் கடும் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பல சிறை அதிகாரிகள் கைதிகளால் சிறைச்சாலைக்குள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும், சிறைச்சாலைக்கு அருகில் திரண்டுள்ள பெருமளவிலான கைதிகளின் உறவினர்கள் கடும் கூச்சலிட்டு, கதறி அழுவதாகவும், அவர்களைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புத் தரப்பினர் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு களத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்ட உள்ளிட்ட பெருமளவு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை