தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பிரசாத் ரணசிங்க இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே. தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும் என இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள்
பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும்.
அன்று பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர்.
அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் (Dinesh Schaffter) கொலை செய்யப்பட்டார்.
இன்று 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதாவது 2022 இலிருந்து 2026 வரை இந்தக் கொலை மூடிமறைக்கப்பட்டது.மேலும் இந்த விசாரணையை மூடிமறைத்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) பொய்க் குறிப்புக்களை எழுதிய, பொய்ச் சாட்சியங்களை உருவாக்கிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை