காணாமல் போனோர் உறவுகளுக்காக புதிய வாய்ப்பு!!
காணாமல் போனோர் அலுவலகமும் (OMP) புனர்வாழ்வுப் பணியகமும் (BOR) காணாமல் போனோர் தொடர்பான விடயங்களில் நிறுவன ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுள்ளன.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தகவல்களின் பிரகாரம், இந்த ஒப்பந்தம் தகவல் பகிர்வு, பரிந்துரைகள், திறன் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை நிறுவ உறுதுணையாக செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை