சிறுமியும் முள்ளம்பன்றியும்

 


கடந்த சில நாட்களாக சிறுமி ஒருத்தி முள்ளம்பன்றியுடன் உலாவரும் காட்சி மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது.

இச்சம்பவம் பொலநறுவையில் இடம்பெற்றுள்ளது.

'14 எள' (14 ஆம் கால்வாய்) கிராமத்தில் வசித்து வரும் அச்சிறுமியின் பெயர் ஸ்ரேதா புன்சதி ஆகும். தற்போது தரம் 2 இல் கல்வி பயிலும் ஸ்ரேதாவிற்கு எப்படி அந்த முள்ளம் பன்றி கிடைத்தது என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நாள், இந்தக் குட்டி முள்ளம்பன்றி நாய்களின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் ஸ்ரேதாவின் வீட்டிற்கு அருகில் வந்ததாக சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான அந்த முள்ளம் பன்றியை , ஸ்ரேதாவும் அவளது குடும்பத்தினரும், அந்த அப்பாவி முள்ளம்பன்றியைப் பராமரித்து குணப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.