போதைப்பொருள் பாவனையைக் கண்டறிய வாய்ப்பு!!

 


பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.


போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் நவீன வசதிகளை ஏற்படுத்துதல், இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பணிகளைத் திறம்படச் செய்தல், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நவீன தொழில்நுட்ப முறைகளைக் கையாளுதல் மற்றும் நச்சுப் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும்  விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் தயாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதுடன், அதனை விரைவில் வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.