முன்னாள் பொலிஸ்மா அதிபரின் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி!!
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கொழும்பு 08, பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடலுக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இன்று(18) நேரடியாக வருகை தந்து தமது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
மலர்ச்சாலைக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சி.டி. விக்கிரமரத்னவின் பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தியமையுடன், அன்னாரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில், நாட்டின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி. விக்ரமரத்னவுக்குப் பலமுறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேபோல், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மலர்ச்சாலைக்கு வருகை தந்து, நாட்டின் பாதுகாப்புத் துறையில் சி.டி. விக்ரமரத்ன ஆற்றிய காத்திரமான சேவைகளை நினைவு கூர்ந்து இறுதி மரியாதை செலுத்தினார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை