அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!!
ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, உரிய சட்டத்தரணி குறைந்தபட்சம் 20 வருடங்களாவது உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகப் பணியாற்றவில்லை எனின், அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை