அனுராதபுரம் நோக்கி பயணித்த புகையிரதம் நமது சொத்து குப்பைத்தொட்டி அல்ல.!📸


அனுராதபுரம் நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றில் பயணம் செய்த சிலர், தாங்கள் உண்டுவிட்டு எஞ்சிய உணவுகள் உணவுப் பொதிகள் பெட்டிகள் குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றாமல் அப்படியே இருக்கைகளிலும், தரையிலும் விட்டுச் சென்றுள்ள காட்சிகள் வேதனையை ஏற்படுத்துகின்றன.


ஒரு பயணம் நிறைவடைந்தாலும், நாம் விட்டுச் செல்லும் குப்பைகள் அடுத்த பயணியின் சிரமமாகவும் புகையிரத ஊழியர்களின் கூடுதல் சுமையாகவும் மாறுகின்றன. இது வெறும் அசுத்தம் மட்டுமல்ல நமது சமூகப் பொறுப்பின்மையின் பிரதிபலிப்புமாகும்.


அரசாங்கம் நாடு முழுவதும் "கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் சுத்தமான, பொறுப்பான ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இந்த நேரத்தில் பொதுமக்களும் அதற்கு ஒத்துழைப்பது காலத்தின் தேவையாகும்.


பொது இடங்கள் குறிப்பாக புகையிரதங்கள் பேருந்துகள் மற்றும் நிலையங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் சொந்தமான பொதுச் சொத்துகள். அவற்றை சுத்தமாகப் பேணுவது அதிகாரிகளின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை பொறுப்பும் ஆகும்.


"நான் போட்ட ஒரு குப்பையால் என்ன ஆகும்?" என்ற எண்ணமே, இன்று இவ்வாறான அவல நிலைகளுக்கு காரணமாகியுள்ளது. மாற்றம் அரசாங்கத்திடமிருந்து மட்டுமல்ல; நம்மிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.


எனவே, பயணம் முடியும் முன் தாங்கள் கொண்டு வந்த கழிவுகளை உரிய குப்பைத்தொட்டிகளில் மட்டுமே அகற்றுங்கள். குப்பைத்தொட்டி இல்லாத இடங்களில், அவற்றை உங்களுடன் எடுத்துச் சென்று சரியான இடத்தில் அகற்றும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.


சுத்தமான இலங்கை அது ஒவ்வொருவரின் பொறுப்பிலிருந்தே தொடங்குகிறது.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.