மோதரையில் இரு T-56 ரக துப்பாக்கிகள் மீட்பு
மோதரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பான வழக்கொன்றில் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ‘மோதர சத்துர’ என அழைக்கப்படும் சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இரு துப்பாக்கிகளும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்ததாகவும், அவை மேலதிக தடயவியல் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது துபாயில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரரே ‘மோதர சத்துர’ எனப்படும் சந்தேகநபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை