வாகன விபத்தில் தாயும் மகனும் பலி; ஒன்றரை வயது குழந்தை காயம்!


பொலனறுவை, பகமூண - தம்புள்ளை வீதியின் தமனயாய பகுதியில்

பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் அவரது மகனும் உயிரிழந்துள்ளதுடன், ஒன்றரை வயதுடைய குழந்தையொன்று காயமடைந்துள்ளது.


இன்று (11) அதிகாலை 1.25 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பகமூண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் பகமூண, தமனயாய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரும், 43 வயதுடைய அவரது மகனுமே உயிரிழந்துள்ளதுடன், அவர்களுடன் பயணித்த குழந்தையொன்று காயமடைந்துள்ளது.


காயமடைந்த குழந்தை பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து, பகமுண - தம்புள்ளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதிக்குத் திரும்ப முயன்ற வேளையில் குறித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி பகமூண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


🛑இந்த பேரூந்தின் சாரதி அதி வேகத்தில் பேரூந்தை செலுத்துவதாகவும், சிலர் இந்த பேரூந்தில் இருந்து உயிர் தப்பியதாகவும் பொதுமக்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.


🛑கட்டுக்கடங்காமல் கெத்து காட்டும் சாரதிகளால் பல அப்பாவி #உயிர்கள் பறிக்கப்படுகின்றன. உங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கு என்று நினைவில் கொள்ளுங்கள்.


🛑பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும்.


#BreakingNews #SriLanka #LKA #Trending #Update #PublicNews #SriLanka #SriLankaNews #Colombo #LocalNews #LiveUpdates #செய்திகள் #SriLankaTamilNews #JaffnaNews #accident #awareness

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.